முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நெக்ஸ்ட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கும் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நெக்ஸ்ட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கும் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நெக்ஸ்ட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கும் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் மருத்துவ கல்வியில் ஏராளமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிலைக்குழு ஆய்வுக்கு பிறகு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. ஆனால், மக்களவை கலைக்கப்பட்டதால், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.இந்நிலையில், புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019மருத்துவ கல்வியை ஒழுங்குபடுத்தும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள், இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளன.எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி தேர்வு, நெக்ஸ்ட் (நேஷனல் எக்சிட் டெஸ்ட்) என்ற பெயரில் பொதுத் தேர்வாக நடத்தவும் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டே முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கிடையாது. இதன் மூலம் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் சிகிச்சை அளிப்பதற்கான லைசென்ஸ் பெற தனி தேர்வு எழுத தேவையில்லை. வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்தவர்களும் இந்த நெக்ஸ்ட் தேர்வை எழுதி இந்தியாவில் சிகிச்சை அளிக்க லைசென்ஸ் பெறலாம். இந்த வரைவு மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மூலக்கதை