குல்பூஷணை பாக். தூக்கிலிட முடியாது:சர்வதேச கோர்ட் தீர்ப்பு

தினமலர்  தினமலர்
குல்பூஷணை பாக். தூக்கிலிட முடியாது:சர்வதேச கோர்ட் தீர்ப்பு

தி ஹேக்: குல்பூஷண் ஜாதவ் வழக்கில், மரண தண்டனையை பாக். ராணுவம் நிறைவேற்ற முடியாது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற குல்பூஷண் யாதவ், 49, 2016-ம் ஆண்டு ஈரான் சென்றிருந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், 2017ல் மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில்,
இந்தியா வழக்கு தொடர்ந்தது. 2017- மே மாதம் மரண தண்டனைக்கு தடை விதித்தது.இந்த வழக்கு தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை விசாரித்த

சர்வதேச நீதிமன்றம், ஜூலை 17-ல் தீர்ப்பு வெளியிட முடிவு செய்திருந்தது.தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: குல்பூஷண் ஜாதவை பாக். ராணுவம் தூக்கிலிட முடியாது. அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பாக். ராணுவம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இந்தியா சார்பில் வழக்கறிஞரை வைத்துக்கொள்ளலாம். உறவினர்களையும் பார்க்கலாம்.இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் சட்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. குல்பூஷண் ஜாதவிற்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.


மூலக்கதை