ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்: மேலும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்: மேலும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம்

புதுடெல்லி: தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தில் மேலும் கூடுதலாக 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு சார்பாக நேற்று ஓ. என். ஜி. சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்ச்சி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தலைமையில் நேற்று  நடைபெற்றது. இதில் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியிலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் நாகை மாவட்டம்-மாதானம் ஆகிய இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இது தவிர, ஒரு இடத்தில் எண்ணெய் வளம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தான போது பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக அங்கு அந்த திட்டம் முழுமையாக மத்திய அரசால் கைவிடப்பட்டது. இதில் தமிழகத்தில் ஏற்கனவே 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக மேலும் 2 இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கு அதிகாரப்பூர்வமாக டெல்லியில் நேற்று கையெழுத்தாகி உள்ளது என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   இதில் குறிப்பாக இரு இடங்களில் 3கி. மீ ஆழத்திலும் மற்ற இரண்டு இடங்களில் 2கி. மீ ஆழத்திலும் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திடீர் ஒப்பந்தத்தால் மீண்டும் தமிழகத்தில் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தும் சூழல் தற்போது உருவாக்கியுள்ளது.

எங்கு அமைகிறது?

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “தமிழகத்தில் கடல் பகுதிகளை ஒட்டி தான் ஹைட்ரோகார்பனை எடுக்க உள்ளோம். இதனால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படாது.

மேலும் தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என நம்புகிறோம் என்று கூறினார்.

இதில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை