மோட்டார் வாகன சட்டத்திருத்தை நிறைவேற்றி, மக்களின் உயிரை காப்போம்: மக்களவையில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

தினகரன்  தினகரன்
மோட்டார் வாகன சட்டத்திருத்தை நிறைவேற்றி, மக்களின் உயிரை காப்போம்: மக்களவையில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

டெல்லி:  இந்தியாவில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்திருத்தம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசிய போது, இந்தியாவில் மட்டும் தான் எளிமையான முறையில் ஓட்டுநர் உரிமத்தை பெற முடியும் என்றார்.ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படம் ஓட்டுநருடன் பொருந்துவதில்லை, அனைவரும் சட்டத்தை மதிக்காமலும், பயமின்றியும் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்  என்றும் யாரும் 100 ரூபாய் அபராதம் குறித்து கவலைப்படுவதில்லை, விதியை மீறிவிட்டு போக்குவரத்து காவலர்களை கடந்து செல்கிறார்கள் என்றும் கட்கரி கூறினார்.மேலும் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் விபத்தினால் உயிரிழப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக இந்த சட்டத்திருத்தை கொண்டுவர முடியாமல் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்த நிதின் கட்கரி, தற்போது இதனை நிறைவேற்றி செய்து மக்களின் உயிரை காப்போம் என்றார்.மேலும் இந்தியாவில், 3 முதல் 4 சதவீதம் மட்டுமே விபத்துகள் குறைக்கப்பட்டிருப்பதாகுவும், தமிழகத்தை பொறுத்தவரை 15 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், தமிழ்நாட்டை பின்பற்றி விபத்துகளை குறைப்போம் என்றார்.

மூலக்கதை