அமெரிக்காவுடன் ஒப்பந்தம்: ஈரான் 'டமார்'

தினமலர்  தினமலர்
அமெரிக்காவுடன் ஒப்பந்தம்: ஈரான் டமார்

வேலுார் : ''இந்த தேர்தலையாவது ஒழுங்காக நடத்த விடுங்கள்,'' என, தி.மு.க.,வினருக்கு, வேலுார் தொகுதி, அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர், ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்தார்.
வேலுார் லோக்சபா தொகுதியில், ஆக., 5ல் தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம், தி.மு.க., சார்பில், கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர், ஏ.சி.சண்முகம், நேற்று பிரசாரத்தை துவங்கினார். அப்போது, அவர் அளித்த பேட்டி:தற்போதும், தி.மு.க., பிரமுகர் வீட்டில், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான், இந்த நேரத்தில், தி.மு.க.,வினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
இந்த தேர்தலையாவது, ஒழுங்காக நடத்த விடுங்கள். சென்ற முறை நீங்கள் செய்த தவறால், பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமையை, வேலுார் மக்கள் இழந்து விட்டனர். இவ்வாறு, அவர் கூறினார். ஓட்டு யாருக்கு?ஏ.சி.சண்முகத்தின், 30 ஆண்டு கால நண்பர், நடிகர் ரஜினிகாந்த். இதனால், தேர்தலில் அவரது ஆசி, சண்முகத்துக்கு உள்ளதாக, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் கூறினர்.வாலாஜாபேட்டை அடுத்த வாணியன்சத்திரத்தில் உள்ள, குளத்தை துார் வார, ரஜினி ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்தனர்.
நேற்று முன்தினம் நடந்த பூஜையில் பங்கேற்ற, ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா, கூறியதாவது:வேலுாரில் யாருக்கும், ரஜினியின் ஆதரவு இல்லை. விரைவில் ரஜினி அரசியல் பிரவேசம் செய்வார். ரஜினி கட்சி ஆரம்பித்து, பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து, அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.ரூ.3.22 லட்சம் பறிமுதல்பறக்கும் படை அலுவலர், நடராஜன் தலைமையில், பள்ளிகொண்டா டோல்கேட்டில் நேற்று அதிகாலை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த லாரியில் இருந்த மூவர், ஆவணமின்றி எடுத்து வந்த, 2.43 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மற்றொரு லாரியில் வந்த இருவரிடம், 79 ஆயிரத்து, 300 ரூபாயை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை