எதற்கும் தயாராக உள்ளோம்: விமானப்படை தளபதி

தினமலர்  தினமலர்
எதற்கும் தயாராக உள்ளோம்: விமானப்படை தளபதி

புதுடில்லி : எந்த வகையான சூழ்நிலையிலும் உடனடியாக களமிறங்க விமானப் படை எப்போதும் தயாராக உள்ளது' என விமானப் படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்தார்.


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த போரின் 20வது ஆண்டையொட்டி டில்லியில் நேற்று(ஜூலை 16) நடந்த கருத்தரங்கில் விமானப் படையின் தலைமை தளபதி தனோவா கூறியதாவது: கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் 17வது ஸ்குவாட்ரனின் தலைவராக பங்கேற்றேன். அப்போது நமது விமானப் படைக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தன. மிராஜ் - 2000 போர் விமானத்தில் மட்டுமே குண்டு திறன் இருந்தது. தற்போது நமது அனைத்து விமானங்களிலும் இந்த வசதி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நாம் பல முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.


கார்கில் போரின்போது இக்கட்டான கட்டத்தில் இரவு நேரத்தில் பனிமலையில் குண்டுகளை திறமையாக வீசி வெற்றி பெற விமானப் படை உதவியது. ஜம்மு - காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது நம் விமானப் படையின் திறமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை