சென்னையை மையமாக கொண்டு அமைக்கப்படும் 'டிபன்ஸ் காரிடார்' திட்ட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

தினகரன்  தினகரன்
சென்னையை மையமாக கொண்டு அமைக்கப்படும் டிபன்ஸ் காரிடார் திட்ட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி :சென்னையை மையமாக கொண்டு ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகளை அமைக்கும் திட்ட பணிகளை துரிதுப்படுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். ராணுவ தளவாடப் பொருட்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வற்காக, கடந்த, 2018ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு \'டிபன்ஸ் காரிடார்\' திட்டங்களை அறிவித்தார். முதலாவது, டிபன்ஸ் காரிடார், தமிழகத்தில் சென்னையை மையமாக கொண்டு, தொழில் நகரங்களான கோவை, திருச்சி, சேலம், ஒசூரை இணைக்கும் விதத்தில், அமைக்கப்படுகிறது. இரண்டாவது, \'டிபன்ஸ் காரிடார்\' உத்தரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்படுகிறது.இந்நிலையில் டெல்லியில் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் உடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது சென்னையை மையமாக கொண்டு கோவை - திருச்சி - சேலம் - ஓசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகள் அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். இதில் முதலீட்டு வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் கட்டமைப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கு தரப்படுவது போல், தனியார் நிறுவனங்களுக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார். தொழில் நிறுவனங்கள், தனி நபர், குழுவினர் என தனித்தனியாக விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை