அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம்

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி எம்.பி.அல் கிரீன் அவையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளார். பெண் எம்பிக்களுக்கு எதிராக இனவெறி கருத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக இருந்து வருகிறார். இதனால், பல்வேறு இனவெறி கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 4 பெண் எம்பிக்களுக்கு எதிராக டிவிட்டரில் அவர் கூறிய கருத்து அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 பெண் எம்பிக்களான கார்டெஸ், உமர், ரசிதா, அயானா ஆகியோர் சமீபகாலமாக டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருபவர்கள். இவர்களில் உமர் தவிர மற்ற 3 பேரும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். உமர் சோமாலியாவில் பிறந்து, சிறு வயதிலேயே அமெரிக்கா வந்தவர். 4 பேரின் பூர்வீகமும் வெவ்வேறு நாடுகள். இவர்களைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டு டிரம்ப் விமர்சித்து, இனவெறி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.  அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேறியதுடிரம்ப்பின் கருத்துக்கு ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானத்தையும் கொண்டு வந்தனர். இதையடுத்து இந்த கண்டன தீர்மானம் உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு பிறகு நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு 240 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் 187 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிபர் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி தீர்மானம் இதனையடுத்து அதிபர் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி எம்.பி.அல் கிரீன் அவையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அவர் பேசியது பின்வருமாறு,\'அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது பேரவை உறுப்பினர்கள் குற்றச்சாட்டு கூறி இருக்கின்றனர். ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் நீடிக்கும் தகுதியை முற்றிலுமாக இழந்து இருக்கிறார். கண்ணியம், ஒழுக்குநெறி, மரியாதை, நாகரீகம், நேர்மை, தனியுரிமை, நற்பெயர்,ஒருமைப்பாடு ஆகியவற்றை அதிபர் ட்ரம்ப் இழந்து விட்டார். சுதந்திரம் மற்றும் நீதியை பாதுகாக்கும் கடமையில் இருந்து ட்ரம்ப் விலகி இருக்கிறார்.\' என்றார். அதிபர் ட்ரம்பை பதவி விலக கோரும் தீர்மானத்தின் மீது இந்த வாரத்திலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அல் கிரீன் வலியறுத்தினார்.

மூலக்கதை