வான்வெளி: இந்தியாவுக்கு திறந்துவிட்டது பாக்.,

தினமலர்  தினமலர்
வான்வெளி: இந்தியாவுக்கு திறந்துவிட்டது பாக்.,

இஸ்லாமாபாத்: இந்திய விமானங்களை, பாகிஸ்தான் வான் பரப்பில் அனுமதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.

புல்வாமா ; பாலக்கோட் :

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தின.

பிப்.26 தடை :

இதனால், பாகிஸ்தான், அந்நாட்டின் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தடை செய்தது. இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றிப் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரூ.430 கோடி கூடுதல் செலவு

இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, பயண நேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை ரூ.430 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை விமானப் படை கடந்த மாதம் நீக்கியது. ஆனால், பாகிஸ்தான் மட்டும் தனது வான் எல்லையை பயணிகள் விமான போக்குவரத்துக்கு திறக்கவில்லை.

விமானப்படை ஜெட் :

எனினும், தற்போதுவரை இந்திய விமானப்படை தளங்களில் தயார் நிலையில் உள்ள ஜெட் விமானங்களை இந்தியா விலக்கிக்கொள்ளவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டு வந்த பெரும் நிதி இழப்பு தவிர்க்கப்படும்.

மூலக்கதை