விளையாட்டில் தலைசுற்ற வைக்கும் பரிசுத்தொகை ரூ2,786 கோடி, ரூ341 கோடி, ரூ69 கோடியில் எது பெருசு?.......கிரிக்கெட்டை விழுங்கும் டென்னிஸ், கால்பந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
விளையாட்டில் தலைசுற்ற வைக்கும் பரிசுத்தொகை ரூ2,786 கோடி, ரூ341 கோடி, ரூ69 கோடியில் எது பெருசு?.......கிரிக்கெட்டை விழுங்கும் டென்னிஸ், கால்பந்து

புதுடெல்லி:  உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியும், விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியும் ஒரே நாளில் (ஜூலை 14) நடந்ததால், இரண்டு விளையாட்டு ரசிகர்களும் கொண்டாட்டமாக இருந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், சர்ச்சைக்குரிய சூப்பர் ஓவர் மூலம் இங்கிலாந்து வெற்றிப் பெற்று முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது.

நியூசிலாந்து அணி தொடர்ந்து இரு உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டியில் தோற்று பெரும் ஏமாற்றமடைந்தது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் மொத்த பரிசுத் தொகை 10 மில்லியன் டாலர் (ரூ. 69. 6 கோடி).

இதில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 4 மில்லியன் டாலர் பரிசும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 2 மில்லியன் டாலர் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே இதுதான் அதிக பரிசுத் தொகையாகும்.

அரையிறுதியில் தோற்ற அணிக்கு 8,00,000 டாலர் பரிசும் வழங்கப்பட்டது. இந்திய அணி இத்தொகையை தான் பெற்றது.

கிரிக்கெட் போட்டிக்குத்தான் இந்த பரிசுத் தொகை என்றால், விம்பிள்டன் டென்னிசுக்கு பலமடங்கு பரிசுத்தை தந்துள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரும், நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர். இதில், ஜோகோவிச் ஐந்தாவது முறையை விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதில், விம்பிள்டன் தொடரின் மொத்த பரிசுத் தொகை 49 மில்லியன் டாலர். இந்தியத் தொகையில் ரூ. 341 கோடி.

உலகக் கோப்பை கிரிக்கெட் பரிசுத் தொகையை விட 5 மடங்கு அதிகமாகும். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு 3. 14 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கிடைக்கும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் அணிக்கு பகிர்ந்து அளிக்கப்படும் தொகையை, விம்பிள்டன் சாம்பியன் தனியாக தட்டிச் செல்கிறார்.

இதனை மிஞ்சும் வகையில், 2018ல் நடந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மொத்த பரிசுத் தொகை 400 மில்லியன் டாலர். அதாவது, இந்திய ரூபாயில் 2,786 கோடி.

2018 ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையின் மதிப்பு என்பது, 6க்கும் மேற்பட்ட ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகையை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை