ஈரானில் முக்காடு அணிய பெண்கள் எதிர்ப்பு : ஹிஜாப் சட்டத்தை மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை

தினகரன்  தினகரன்
ஈரானில் முக்காடு அணிய பெண்கள் எதிர்ப்பு : ஹிஜாப் சட்டத்தை மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை

தெஹ்ரான் : ஈரானில் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் துணியை கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிக்கு அந்நாட்டு பெண்களிடம் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 1979ம் ஆண்டு ஏற்பட்ட இஸலாமிய புரட்சிக்கு பின்னர் ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இதனை தற்போது எதிர்க்க தொடங்கி இருக்கும் பெண்கள், ஹிஜாப் அணியாமல் பொது இடங்களை துணிச்சலாக நடமாட தொடங்கி இருக்கின்றனர். ஹிஜாப் கட்டாயம் என்ற விதி தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிரானது என்பது அந்நாட்டு பெண்களில் வாதம் ஆகும். இஸ்லாமிய விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து விதிமீறுவோரை சட்டத்தின் முன் நிறுத்த ஈரானில் உருவாக்கப்பட்ட அறநெறி காவல்த் துறை மீதும் அந்நாட்டு பெண்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் பூங்கா ஒன்றில்  தண்ணீர் துப்பாக்கியை வைத்து விளையாடிய பெண்ணை அறநெறி காலவர்கள் கைது செய்து இழுத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை