காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது!: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது!: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை

பெங்களூரு : கர்நாடக சட்டமன்றம் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் நோக்கி உள்ள நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க்கை  சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.ஐஎம்ஏ தங்க நகை நிறுவன நிதி மோசடி வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு ஒன்று ரோஷன் பெய்க்கை கைது செய்துள்ளது. கர்நாடக பாஜகத் தலைவர் எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷுடன் பெய்க் தனி விமானத்தில் மும்பைக்கு புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெய்க் கைது செய்யப்பட்டதன்  பின்ணணியில் அரசியல் காரணம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் குமாரசாமி மோசடி குற்றச்சாட்டின் பெயரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் ஆட்டம் காணும் தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே குமாரசாமி, ரோஷன் பெய்கை கைது செய்துள்ளதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டி இருக்கிறது. ரோஷன் பெய்க் அமைச்சராக பதவி வகித்த போது, ஐஎம்ஏ நகை நிறுவன நிதி மோசடியை மறைப்பதற்காக அதிபர் மன்சூர் கானிடம் லஞ்சம் பெற்றார் என்பது குற்றச் சாட்டு ஆகும்.

மூலக்கதை