உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை

லண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி \'டை\'யில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் இங்கிலாந்து அணி வீரர் பட்ளர் மற்றும் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்தனர். இருவரும் இணைந்து 15 ரன்கள் எடுத்தனர். மேலும் சூப்பர் ஒவரில் 16 ரன்களை வெற்றி இழக்காக இங்கிலாந்து அணி நிர்ணயத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி வீரர் கப்டில் மற்றும் நீஸ்சாம் களமிறங்கி 7 பந்துகளில் 15 ரன்களே எடுக்க முடிந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி இழக்கை முறுயடித்து வெற்றி பெற்றது. மேலும் முதன்முதலில் உலகப்கோப்பை வென்றது இங்கிலாந்து அணி சாதனை படைத்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணி மோதியது. இந்த இறுப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணிகேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மார்டின் கப்தில், நிகோல்ஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கப்தில் 19 ரன் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். இதையடுத்து  நிகோல்சுடன் வில்லியம்சன் இணைந்தார். நிகோல்ஸ் - வில்லியம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. ல்லியம்சன் 30 ரன் எடுத்து பிளங்கெட் பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டார். நிதானமாக விளையாடி அரை சதம் அடித்த நிகோல்ஸ் 55 ரன் எடுத்து (77 பந்து, 4 பவுண்டரி) பிளங்கெட் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். டெய்லர் 15 ரன்னில் பெவிலியன் திரும்ப, நீஷம் 19 ரன், கிராண்ட்ஹோம் 16 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய டாம் லாதம் 47 ரன் (56 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வோக்ஸ் வேகத்தில் ஜேம்ஸ் வின்ஸ் வசம் பிடிபட்டார். மேட் ஹென்றி 4 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் கிளீன் போல்டாக, நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. சான்ட்னர் 5, போல்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் வோக்ஸ், பிளங்கெட் தலா 3 விக்கெட், ஆர்ச்சர், மார்க் வுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை