ஆப்கானிஸ்தானுக்கு ரஷித் கான் கேப்டன்

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானுக்கு ரஷித் கான் கேப்டன்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பை லீக் சுற்றில் குல்பாதின் நயிப் தலைமையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இக்கட்டான தருணங்களில் கேப்டன் குல்பாதின் செயல்படுத்திய வியூகங்களும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூன்று வகை சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக நட்சத்திர ஸ்பின்னர் ரஷித் கான் (20 வயது) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சர்வதேச டி20ல் நம்பர் 1 பவுலராகவும், ஒருநாள் தரவரிசையில் 8வது இடத்திலும் உள்ள ரஷித், உலக கோப்பையில் விக்கெட் வேட்டை நடத்தத் தவறியது குறிப்பிடத்தக்கது. அவர் 8 இன்னிங்சில் வெறும் 6 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

மூலக்கதை