5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர் எம்எல்ஏ.வை கொன்றநக்சல் சுட்டுக்கொலை: சட்டீஸ்கரில் அதிரடி

தினகரன்  தினகரன்
5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர் எம்எல்ஏ.வை கொன்றநக்சல் சுட்டுக்கொலை: சட்டீஸ்கரில் அதிரடி

தண்டேவாடா: சட்டீஸ்கரில் பாஜ எம்எல்ஏ பீமா மாண்டவி மற்றும் 4 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். சட்டீஸ்கர் மாநில பாஜ எம்எல்ஏ.வாக இருந்தவர் பீமா மாண்டவி. தண்டேவாடா மாவட்டம், சியாம்கிரி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தனது பாதுகாப்பு படை அதிகாரிகள் 4 பேருடன் வாகனத்தில் சென்றபோது, நக்சலைட்கள் அந்த வாகனத்தை குண்டு வைத்து தகர்த்தனர். இதில், மாண்டவியும், அவருக்கு பாதுகாப்புக்கு சென்ற 4 போலீசாரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கட்டேகல்யான் பகுதி மாவோயிஸ்ட் தலைவர் ஹுரா என்பவரை போலீசார் தேடினர். அவரது தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சுக்மா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாவட்ட ரிசர்வ் போலீசார் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அ்கு பதுங்கியருந்த நக்சல்களுடன் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பின்னர், அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்த நக்சல் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், அது ஹுரா என அடையாளம் தெரியவந்தது. அவர் வைத்திருந்த 303 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மூலக்கதை