ரஷித் கான் கேப்டன் | ஜூலை 12, 2019

தினமலர்  தினமலர்
ரஷித் கான் கேப்டன் | ஜூலை 12, 2019

 புதுடில்லி: ஆப்கானிஸ்தானின் மூன்றுவித அணிக்கும் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டார்.

உலக கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக பங்கேற்றது ஆப்கானிஸ்தான் அணி. அதுவரை கேப்டனாக இருந்த அஸ்கர் ஆப்கன் நீக்கப்பட்டு, உலக கோப்பை தொடரில் குல்பதீன் கேப்டன் ஆனார். 

இதை முகமது நபி, ரஷித் கான் உள்ளிட்ட வீரர்கள் விமர்சித்தனர். குல்பதீன் தலைமையில் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெறும் என நம்பப்பட்டது. மாறாக பங்கேற்ற 9 லீக் போட்டிகளிலும் தோற்று கடைசி இடத்துக்கு (10 வது) தள்ளப்பட்டது. 

இதனிடையே ஆப்கானிஸ்தானின் மூன்று வித அணிக்கும் கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நியமிக்கப்பட்டார். துணைக் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன் குல்பதீன் (ஒருநாள்), ரஷித் கான் (‘டுவென்டி–20’), ரஹ்மத் ஷா (டெஸ்ட்) என மூன்று கேப்டன்கள் இருந்தனர். 

மூலக்கதை