பாக்.,வழி மூடல்:தினசரி ரூ.22 லட்சம் இழப்பு

தினமலர்  தினமலர்
பாக்.,வழி மூடல்:தினசரி ரூ.22 லட்சம் இழப்பு

புதுடில்லி: பாகிஸ்தானின் வான்வழியை பயன்படுத்தாததால் ஏர்இந்தியாவுக்கு ரூ.22 லட்சம் இழப்பு ஏற்படுகிறது.


இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பார்லி.,யில் கூறியதாவது:


கடந்த பிப்., மாதம் காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பாலகோட் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தானின் வான்வழியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் மாற்று வான்வழியை பயன்படுத்தி வந்தன. இதனால் பயண நேரம் கூடுதலாக ஆவதுடன் எரிபொருளும் கூடுதல் செலவாகிறது.




தொடர்ந்து ஏர் இந்தியாவை பல்வேறு நகரங்களுக்கு இயக்குவதற்கு ஒரு நாளைக்கு கூடுதலாக ரூ.13 லட்சம் செலவாகிறது. அதே நேரத்தில் வருவாய் இழப்பு ரூ.22 லட்சமாக உள்ளது. வான்வழியை மாற்றி பயன்படுத்தவதன் மூலம் கூடுதல் செலவு ஏற்பட்ட போதிலும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


பிரதமர் மோடி இரண்டாவதுமுறையாக பதவியேற்ற பின்னர் கிர்கிஸ்தானில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதும் பாக்.,வான்வழியை பயன்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை