கோர்ட்டில் ஆஜரானார் இந்திராணி முகர்ஜி

தினமலர்  தினமலர்
கோர்ட்டில் ஆஜரானார் இந்திராணி முகர்ஜி

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜி, நேற்று, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்றம் தனக்கு அளித்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாகஅறிவித்தார்.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான, இந்திராணி முகர்ஜி, தன் மகளை கொலை செய்த வழக்கில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.


காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை பெற, மத்திய அரசின் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், தடையில்லா சான்று வழங்கியது.காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அப்போது, மத்திய நிதியமைச்சராக இருந்தார். விதிமுறைகளை மீறி, இந்த அனுமதி அளிக்கப்பட்டதாகவும், இதற்கு, சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், இதற்காக, அவருக்கு வேண்டிய நிறுவனத்துக்கு, இந்திராணி முகர்ஜி தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும்குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை, தனித்தனியாக விசாரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கில், தான்அப்ரூவராக மாறப் போவதாக, இந்திராணி, டில்லி, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.நேற்று, சிறப்பு நீதிமன்றத்தில், இந்திராணி ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கில், அனைத்து உண்மைகளையும் தெரிவிக்கப் போவதாக, இந்திராணி தெரிவித்தார்.அவர், அப்ரூவராக மாற, நீதிபதி, அருண் பரத்வாஜ், அனுமதி அளித்தார். இதன்பின், தனக்கு, நீதிமன்றம் அளிக்கும் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக, இந்திராணி தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

மூலக்கதை