மதுரை ஒத்தகடையில், கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சகாயம் குழுவினர் ஆய்வு செய்தனர். ஒத்தக்கடை அடுத்துள்ள கருப்புக்கால், சிவலிங்கம், பூலாம்பட்டி , புதுதாமரைப்பட்டி ஆகிய

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
மதுரை ஒத்தகடையில், கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சகாயம் குழுவினர் ஆய்வு செய்தனர். ஒத்தக்கடை அடுத்துள்ள கருப்புக்கால், சிவலிங்கம், பூலாம்பட்டி , புதுதாமரைப்பட்டி ஆகிய

மதுரை ஒத்தகடையில், கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சகாயம் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஒத்தக்கடை அடுத்துள்ள கருப்புக்கால், சிவலிங்கம், பூலாம்பட்டி , புதுதாமரைப்பட்டி ஆகிய பகுதிகளில் கிரானைட் குவாரிகளால் அழிக்கப்பட்ட பாசன கால்வாய்கள், கண்மாய்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், குடியிருப்புகளில் சட்ட ஆணையர் சகாயம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வீடியோ பதிவுகளை செய்து வருகின்றனர். இன்று ஒத்தக்கடை பகுதியில் சகாயம் குழுவினர் 10க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை படம் பிடித்தனர். மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து சட்ட ஆணையர் சகாயம் குழுவின் 8ஆம் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. குவாரி உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் குறித்து விளக்கமளிக்குமாறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் தபால் மூலமாகவும் நேரடியாகவும் வங்கிகள் சார்பாக விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. இதே போல கலால், சுங்கம் ,வருமான வரி உள்ளிட்ட துறைகளிடமும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை