சீக்கியர்களுக்கு எதிராக கருத்து : இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
சீக்கியர்களுக்கு எதிராக கருத்து : இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

சீக்கியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் மூலம் சமூக சேவைகளை செய்து வரும் குர்மீட் ராம் ரஹீம் சிங், மெசெஞ்சர் ஆப் காட் எனப்படும் கடவுளின் தூதர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஏற்கனவே பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராம் ரஹீம் சிங் குறித்து, பாலிவுட் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான ராம் கோபால் வர்மா டுவிட்டரில் அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட ராம் ரஹீமின் ஆதரவாளர்கள், பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மத ரீதியாக பிறர் மனதை புண்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ராம் கோபால் வர்மா ஏற்கனவே, விநாயகர் குறித்து சில கருத்துகளை கூறியதால் கண்டனத்துக்கு உள்ளானார்.

மூலக்கதை