காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்: “ராகுலுக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு”

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்: “ராகுலுக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு”

காங்கிரஸ் கட்சியில் அதிரடியான பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர ராகுல்காந்தி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் முதல் கட்டமாக குஜராத், மகாராஷ்ட்டிரா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில், தலைமைப் பதவியில் உள்ளவர்கள் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சும் வகையில், பெருவாரியான இளைஞர்களை பொறுப்புகளில் நியமிக்க ராகுல்காந்தி விரும்புவதாகவும் தெரிகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருக்கும் எம்.ராமச்சந்திரன், மாநிலத் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், அவர்கள் செயல்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, திடீரென அரசியல் விடுப்பில் சென்றது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதிரடி மாற்றங்களுக்கான புதிய திட்டங்களுடன் அவர் மீண்டும் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை