கருப்புப் பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு சிறை : கூடங்குளம் 2ஆவது அணு உலையில் 2015-16ல் மின் உற்பத்தி

புதிய தலைமுறை  புதிய தலைமுறை

தமிகத்தில் AIIMS எனப்படும் அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2015-16ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அனைத்து மாநிலங்களிலும் AIIMS எனப்படும் அகில இந்திய மருத்துவக் கழகம் அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக கூறினார். முதல் கட்டமாக தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதுதவிர தமிழகத்திற்கென பெரிய அளவில் எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து அருண் ஜெட்லி கூறுகையில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது. பிகார் மாநிலத்தில் மருத்துவ சேவையை அதிகப்படுத்துவதற்கான திட்டமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே பிகாரிலும் எய்ம்சுக்கு இணையான மருத்துவமனையை அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது என்றார்.

கருப்புப் பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு சிறை

கருப்புப் பணத்தை பதுக்குவோரை தண்டிக்க கடுமையான சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருண் ஜெட்லி கூறுகையில், வெளிநாட்டுச் சொத்துகள், அதன்மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை மறைப்பது, வரி ஏய்ப்பு செய்வது போன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும். இது தனி குற்றமாகவே கருதப்படும். தீர்வு ஆணையத்திடம் சென்று சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், வெளிநாட்டுச் சொத்துகளை மறைத்தல், வரி ஏய்ப்பு செய்தால் 300% வரி அபராதமாக விதிக்கப்படும் என்றார்.

''கூடங்குளம் 2ஆவது அணு உலையில் 2015-16ல் மின் உற்பத்தி''

மின்சார உற்பத்திக்காக 5 மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்ட நிதியமைச்சர், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2ஆவது உலை 2015-16ஆம் நிதியாண்டில் மின் உற்பத்தியை தொடங்கும் என அறிவித்தார். கருப்புப் பணத்தை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அருண் ஜெட்லி, கருப்புப் பண பதுக்கலை தடுப்பதற்கான தனிச் சட்ட மசோதா, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றார். வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு கடும் தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகுக்கும் என்றும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், TRANS வெளிநாட்டுச் சொத்துகள், அதன்மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை மறைப்பது, வரி ஏய்ப்பு செய்வது போன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும். இது தனி குற்றமாகவே கருதப்படும். தீர்வு ஆணையத்திடம் சென்று சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், வெளிநாட்டுச் சொத்துகளை மறைத்தல், வரி ஏய்ப்பு செய்தால் 300% வரி அபராதமாக விதிக்கப்படும் என்றார். மேலும் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி பதுக்குவதை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என கூறிய அவர், உள்நாட்டில் கருப்புப் பண முறையை ஒழிக்க திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, பணமாக கொடுத்து பொருட்களை வாங்குவதை தடுக்கும் வகையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க சலுகைகள் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்

மூலக்கதை