மக்களுக்கு சுமையை அதிகரிக்கும்: நிபுணர்கள் கருத்து

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
மக்களுக்கு சுமையை அதிகரிக்கும்: நிபுணர்கள் கருத்து

மத்திய பட்ஜெட்டில் சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் என வரித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி மொபைல் ஃபோன் கட்டணத்தில் இருந்து இசை நிகழ்ச்சிகள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வரை கூடுதல் தொகையை மக்கள் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தீம் பார்க்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வதற்கான கட்டணங்களும் அதிகரிக்க உள்ளது. இது தவிர தூய்மை இந்தியா திட்டத்துக்காக 2 சதவிகித கூடுதல் வரியும் சேர்வதால் சேவைவரி உண்மையில் 16 சதவிகிதமாக இருக்கும் என்றும் வரித் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சேவை வரி உயர்வு சாமானிய மக்களின் செலவினங்களை அதிகரிக்கும் என்றும் வரித் துறை நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை