செவ்வாய் கிரகத்தில் எடுத்த முதல் புகைப்படம் இன்சைட் விண்கலம் நாசாவுக்கு அனுப்பியது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
செவ்வாய் கிரகத்தில் எடுத்த முதல் புகைப்படம் இன்சைட் விண்கலம் நாசாவுக்கு அனுப்பியது!

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆழமாக ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சைட் விண்கலம், தரை இயங்கியதும் எடுத்த  முதல் புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பி உள்ளது. 

செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்வதற்காக  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட், கடந்த மே மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட இந்த  இன்சைட் விண்கலம், கடந்த 6 மாதங்களில் 54.8 கோடி கிமீ தூரம் பயணித்து செவ்வாய் கிரகத்தை  அடைந்து உள்ளது. நாசாவின் 9வது செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலமான இன்சைட்,  செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. தனது வேகத்தை குறைத்துக் கொண்டே வந்து இன்ஜினில் இருந்து விடுபட்டு தரை இறங்கியது.

செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்பை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பப்பட்ட இன்சைட் விண்கலம், செவ்வாயில் தரையிறங்கியதும் எடுத்த முதல் புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பி உள்ளது.

இந்த தகவலை நாசா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த இன்சைட் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் நிலவும் வெப்ப நிலை, நீர்வளம் ஆகியவை குறித்து மிகத் துல்லியமான தகவலை அனுப்பி வைக்கும்.

செவ்வாய் கிரகத்தில் இன்சைட் விண்கலம் இறங்கும் காட்சி நியூயார்க் டைம் சதுக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த விண்கலத்துக்கு முன் நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி விண்கலம், கடந்த மார்ச் மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை