2022- ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: பிரதமர் மோடி வாக்குறுதி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

நமது நாடு 75-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்கும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து உள்ளார்.

200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ராஜஸ்தானில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி, வாக்கு சேகரித்து, பிரசாரம் செய்தார்.

மேலும் மேவார் பகுதியில் உள்ள பில்வாரா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது,

நான் ஒருநாளாவது விடுமுறை எடுத்ததாக நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? ஓய்வுக்காக நான் எங்கேயாது சென்றதாகவோ, ஒருவாரம் காணாமல் போனதாகவோ நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?. எனது ஒவ்வொரு செயலையும், நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் வெளிப்படையாகவே செய்து வருகிறேன்' என்றார்.

பனேஷ்வர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில்  பிரதமர் மோடி,  ‘மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோதே விளைபயிர்களுக்கான காப்பீடு, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர்களால் தங்களது பதவி நாற்காலியைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறைகள் கடந்த 55 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்து உள்ளன. ஆனால், மின்சாரம், குடிநீர், சாலைகள், கழிப்பிட வசதி ஆகியவை கிராமங்களை சென்று சேரவே இல்லை’

இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை