அமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1,637 விமானங்கள் ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1,637 விமானங்கள் ரத்து

மிஸ்சோரி: மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசிவருவதால், ஞாயிற்றுக்கிழமை மாலை 1,637 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்புடன் இருக்க வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருவதால், முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். ‘இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு உள்ளது.

சில மாநிலங்களில் 12 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் ஏற்படலாம். பனிப்புயல் வடமேற்கு மாநிலங்களை நோக்கி நகரும்’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1,637 விமானங்கள், அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை ரத்து செய்யப்பட்டன. சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகபட்சமாக 770 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்புயல் தாக்கும் என்று அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் 1. 4 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

குறிப்பாக கன்சாஸ், மிசவுரி, நெப்ரஸ்கா, அயோவா மாநிலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

.

மூலக்கதை