ஆஸ்திரேலியாவில் காந்தி சிலை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஆஸ்திரேலியாவில் காந்தி சிலை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்!

ஆஸ்திரேலியாவில் காந்தி சிலையை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் சென்றார். வியட்நாம் பயணத்தை முடித்த பின் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று உள்ளார். 

மகாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார்.விழாவில், ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசன், இந்திய வம்சாவளியினர் பலர் பங்கேற்றனர்.

விழாவில், ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

மகாத்மா காந்தியின் அஹிம்சை மற்றும் அமைதி தத்துவங்கள், இப்போதும் தேவையாக உள்ளன. உலகில் அமைதி நிலவ, காந்தியின் அஹிம்சை கொள்கையை பின்பற்றுவது தான், ஒரே வழி. மகாத்மா காந்தி, இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகுக்கே பொதுவானவர். அவரது சிலையை, ஆஸ்திரேலியாவில் திறந்து வைத்ததை, எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.

ஆஸ்திரேலியாவில், பல தரப்பட்ட கலாசாரங்கள், நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பல்வேறு கலாசாரங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வதை, காந்தி எப்போதும் ஆதரித்து வந்தார்.இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை