ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு: பரூக் அப்துல்லாவும் ஆதரவு

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு: பரூக் அப்துல்லாவும் ஆதரவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல்  நடந்தது. மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன. 87 எம்எல்ஏ.க்கள் கொண்ட  பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பலகட்ட பேச்சுக்குப்பின் பாஜக - மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அதில் 28 இடங்களில் வெற்றி பெற்ற பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி பாஜக ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் பதவியை வகித்து வந்தார். காஷ்மீரில் ரம்ஜானையொட்டி தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை நிறுத்தி வைக்கப்பட்டது. ரம்ஜான் முடிவடைந்ததால் சண்டை நிறுத்ததை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. சண்டை நிறுத்தத்தை தொடருமாறு மெஹபூபா முப்தி வலியுறுத்தினார். சண்டை நிறுத்தப் பிரச்சனையால் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. மத்திய அரசு முடிவை மெஹபூபா ஏற்காததால் பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. கொள்கை அளவில் எதிர்துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் 26 மாதங்கள் சேர்ந்து ஆட்சியில் இருந்ததே மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆட்சி கவிழும் என்பதால் மெஹபூபா முப்தியே ராஜினாமா செய்தார். 28 எம்.எல்.ஏ.க்கள் உள்ள மெஹபூபா கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் உமல் அப்துல்லா கட்சி ஆதரவு தருமா என கேள்வி எழ தொடங்கியுள்ளது.  ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுநர் வோரா கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்நிலையில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. 3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை