காற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை: வானிலை ஆர்வலர் செல்வக்குமார்

தினகரன்  தினகரன்
காற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை: வானிலை ஆர்வலர் செல்வக்குமார்

மன்னார்குடி: காற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். புதன்கிழமை மதியம், இந்த தாழ்வு நிலை சேலம் நோக்கி நகர்வதால், தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். மேலும், டெல்டா பகுதிகளில் இனி மழைக்கு வாய்ப்பில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த புயல் நவம்பர் 29 -ம் தேதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

மூலக்கதை