தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி | நவம்பர் 19, 2018

தினமலர்  தினமலர்
தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி | நவம்பர் 19, 2018

திருப்பூர்: விஜய் மெர்ச்சன்ட் டிராபி தொடர் லீக் போட்டியில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

திருப்பூரில் 16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்ச்சன்ட் டிராபி தொடரின் லீக் (3 நாட்கள்) போட்டி நடந்தது. முதல் இன்னிங்சில் ஆந்திரா 139, தமிழகம் 342/5 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் ஆந்திரா அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்து 138 ரன்கள் பின் தங்கியிருந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஆந்திர அணி 167 ரன்னுக்கு சுருண்டது. தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் சார்பில் திரன், ஆதித்யா தலா 4 விக்கெட் சாய்த்தனர். தமிழக அணி போனஸ் உட்பட மொத்தம் 7 புள்ளிகள் பெற்றது. 

மூலக்கதை