புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்குவதற்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்குவதற்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி : புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்குவதற்கான புதிய நெறிமுறைகளை மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் படி கடலோரத்தில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு கடல்நீர் குளிரோட்ட பயன்படும் என்றால் கழிவு நிலை என்பது பூஜ்யமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனல்மின் நிலையங்களில் புகை வெளியேற்றி குழாய்களை அமைக்க விமானப் போக்குவரத்துத் துறையின் அனுமதியையும் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு நிலத்தடி நீரை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அனுமதியை பெற்று இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.நிலக்கரியை கையாள தூசி எழாத போக்குவரத்தையை  பயன்படுத்த வேண்டும், மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அனல்மின் நிலையத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மாசை கண்காணிக்க கட்டாயமாக கண்காணிப்புக் குழுவை அமைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை