சபரிமலை பிரச்சனையால் பூ வியாபாரம் மந்தம் : வெறிச்சோடியது தோவாளை மலர்சந்தை

தினகரன்  தினகரன்
சபரிமலை பிரச்சனையால் பூ வியாபாரம் மந்தம் : வெறிச்சோடியது தோவாளை மலர்சந்தை

குமரி: சபரிமலை கோயில் பிரச்சனை காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டதால், தோவாளை மலர் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகளவு காணப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐயப்ப பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பூக்களை வாங்குவதற்கு யாரும் வராததால், பூக்களின் விலை சரிந்து விட்டது. இது பற்றி பேசிய தோவாளை பூ வியாபாரிகள், கடந்த 5 நாட்களாக சுத்தமாக பூ வியாபாரமே இல்லை என வேதனை தெரிவித்தனர். சபரிமலை பிரச்சனையால் 100 பேர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட வேண்டிய இடத்தில், 10 பேரே மாலை போட்டுள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால் சீசனே இல்லை என்றனர். கடந்த வருடம் 200 ரு்பாய்க்கு விற்ற பூக்கள், தற்போது ரூ.120-க்கு விற்ப்பட்டும் அதனை வாங்க ஆள் இல்லை என கூறியுள்ளனர். அதே போல கடந்த வருடம் ரூ.1100-க்கு விற்கப்பட்ட பிச்சி பூக்கள் தற்போது ரூ.700-க்கு விற்கப்படுவதாகவும், அப்படியும் வியாபாரம் களை கட்டாமல் ிமகுந்த மந்தமாகவே இருப்பதாகவும் கூறியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பால் கேரளாவில் நடைபெறும் போராட்டங்கள் காரணமாகவே ஐயப்ப பக்தர்களின் வருகை குறைந்துவிட்டது என்றும்., இதனால் தான் தோவாளை மலர்சந்தைக்கு பூக்கள் வாங்க வெளியூர் வியாபாரிகள் வரவில்லை என கூறப்படுகிறது. உள்ளூர் வியாபாரமும் மந்தமாகிவிட்டதால் பூக்களின் விலை சரிந்து விட்டதாக தோவாளை சந்தை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை