பறவைகள் சரணாலயமாக காட்சி அளிக்கும் சூரத் நகர்

தினகரன்  தினகரன்
பறவைகள் சரணாலயமாக காட்சி அளிக்கும் சூரத் நகர்

சூரத்: பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப புழம் பெயர்வது பறவைகளின் வழக்கம் ஆகும். குஜராத் மாநிலம் சூரத் நகர் இப்போது பறவைகள் சரணாலயமாக காட்சி அளித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்ல செர்பியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் கூட பறவைகள் இங்கு தஞ்சம் அடைந்துள்ளன. புறாக்கள், நாரைகள், கொக்குகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் உணவையும், நீரையும் தேடி இங்கு வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலர் பறவைகளுக்கு ஆர்வமாக தினி பொட்டு வருகிறார்கள். மேலும் பறவைகள் அங்கு உள்ள ஏரிகளில், மற்றும் குளங்களில் நிறைந்து காணப்படுவதால் மக்கள் ஆர்வமாய் கண்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் அங்கு உள்ள பறவைகளை காண வருகை தந்துள்ளனர். மேலும் இதே போல் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் எண்ணற்ற பறவைகள் தஞ்சம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை