தனிநபர்களின் விவரங்களைப் பாதுகாக்க புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் தேவை : ஆப்பிள் சிஇஓ கருத்து

தினகரன்  தினகரன்
தனிநபர்களின் விவரங்களைப் பாதுகாக்க புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் தேவை : ஆப்பிள் சிஇஓ கருத்து

கலிபோர்னியா: சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனிநபர்களின் விவரங்களைப் பாதுகாக்க புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் வகுக்க வேண்டியது அவசியம் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். இது குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், சமீப காலங்களில் நடந்த தொழில்நுட்ப முறைகேடுகளால் தகவல் தொழில்நுட்ப நிறு வனங்கள் மற்றும் சமூக வலை தளங்கள் ஆகியவற்றில் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கும் வகை யிலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்றார். தமக்கு திறந்த சந்தையின் மீது பெரிய நம்பிக்கை உண்டு. ஆனால், திறந்தசந்தை என்பது பல வகைகளில் சிக்கலானது என்பதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும் என கூறினார். Face book நிறுவனமும் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா கன்சல்டன்சி நிறுவனமும் சேர்ந்து பல லட்சக்கணக்கான ஃபேஸ்புக் பய னாளர்களின் விவரங்களை வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இனை நினைவுகூர்ந்து பேசிய டிம் குக், மேற்கண்டதை போன்று பல விவகாரங்களில் நிகழ்ந்த விளைவைப் பார்த்தால், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவு கோலில் எடுக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளதாக கூறினார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஃபேஸ்புக் நிறுவனர் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் மீது பல முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அந்நிறுவன முதலீட்டாளர்களே அவரைப் பதவி விலகக் கோரி போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை