ஸ்மித், வார்னர் தடை நீடிப்பு | நவம்பர் 20, 2018

தினமலர்  தினமலர்
ஸ்மித், வார்னர் தடை நீடிப்பு | நவம்பர் 20, 2018

பிரிஸ்பேன்: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்மித், வார்னர், பான்கிராப்டின் தண்டனை காலத்தை குறைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு மறுத்துவிட்டது.

கடந்த மார்ச்சில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் நடந்தது. இதில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் சிக்கினர். பான்கிராப்ட் (9 மாதம்) தவிர மற்ற இருவருக்கும் தலா 12 மாதம் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு (சி.ஏ.,) தடை விதித்தது. சமீபத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இந்த தடையை குறைக்க வலியுறுத்தியது. இது குறித்து அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், தண்டனை காலத்தை குறைக்க சி.ஏ., மறுத்துவிட்டது. சி.ஏ., வெளியிட்ட அறிக்கையில்,‘ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்தோம். ஸ்மித், வார்னர், பான்கிராப்டிற்கு விதிக்கப்பட்ட தண்டனையில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என முடிவு செய்துள்ளோம்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்திய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஸ்மித், வார்னர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை