குடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கண் துடைப்பு!சம்பிரதாயமாக நடந்து முடிந்த கூட்டம்

தினமலர்  தினமலர்
குடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கண் துடைப்பு!சம்பிரதாயமாக நடந்து முடிந்த கூட்டம்

பல்லடம்:பல்லடத்தில் நடந்த குடிநீர் வினியோகம் குறித்த ஆய்வு கூட்டத்தில், 'இருக்கு... ஆனா... இல்லை' என்கிற அலுவலர்களின் பதில், பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.பல்லடம், பொங்கலுார் வட்டார ஊராட்சிகளில், அத்திக்கடவு குடிநீர் வினியோகம் குறித்த ஆய்வு கூட்டம், பல்லடம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. எம்.எல்.ஏ., நடராஜன் தலைமை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் ராதா, பி.டி.ஓ., கந்தசாமி, வில்சன் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு, பல மாதங்களாக இருந்து வருகிறது. அது குறித்து, ஊராட்சி செயலர், மற்றும் குடிநீர் பராமரிப்பாளர்களிடம் புகார் தெரிவித்தும், தொடர்கதையாகவே உள்ளது. எனவே அது குறித்து ஆய்வு கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நடத்தப்பட்டது.பல்லடம் வட்டார ஊராட்சி கிராமங்களுக்கு, தினமும், 49.52 லட்சம் லி., குடிநீர் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஆய்வில், 37.33 லட்சம் லி., மட்டுமே மக்களுக்கு சப்ளையாவதாக தெரிய வந்தது. இந்நிலையில், தற்போது எடுக்கப்பட்ட ஆய்வின்படி, 40.47 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும், 9.05 லட்சம் லி., குடிநீர் எப்படி மாயமானது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அலுவலர்கள், 'இருக்கு... ஆனா, இல்லை' என்கிற கதையாக, பதில் அளித்தனர்.'சரியான அளவே வினியோகிக்கிறோம்,' குடிநீர் வடிகால் வாரியத்தினரும், 'நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைவாகவே அளவே குடிநீர் வருகிறது,' என குடிநீர் பராமரிப்பாளர்களும், மாறி மாறி அதிகாரிகளை குழப்பினர்.அதன்பின், பொங்கலுார் ஒன்றிய ஊராட்சிகளிலும் இதே நிலை நிடித்ததால், ஆய்வு கூட்டம் வழக்கம்போல் சலசலப்புடனேயே முடிந்தது. கோடை காலம் துவங்குவதற்கு முன், குடிநீர் பிரச்னைக்கு, அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

மூலக்கதை