இந்திய பெண்களுக்கு அமெரிக்காவில் மரியாதை

தினமலர்  தினமலர்

வாஷிங்டன், : அமெரிக்காவில், அரசியல், வர்த்தகம் உட்பட, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.அமெரிக்காவில், பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்களுக்கான நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. இதில், அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் எட்டு பேர், பல்வேறு துறைகளில் செய்த சாதனைகளுக்காக கவுரவிக்கப்பட்டனர்.வழக்கறிஞர் ஷீலா மூர்த்தி, ஆசிய - அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர், ஜக்ருதி பான்வாலா, 'நாசா'வில் பணியாற்றும், மதுலிகா குஹதக்குர்தா உட்பட எட்டு பேருக்கு, விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழிலதிபர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், காலைஞர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

மூலக்கதை