வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

தினகரன்  தினகரன்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

டெல்லி: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின், விதிஷா மக்களவைத் தொகுதியிலிருந்து, நாடாளுமன்றத்திற்கு சுஷ்மா ஸ்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் சுஷ்மா, வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், சட்டமன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மன நிலையில் தாம் இல்லை என்றார். சுஷ்மாவுக்கு கடந்த ஆண்டில் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் இருந்ததால் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார். ஒருவேளை கட்சி தலைமை உத்தரவிட்டால், தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், சுஷ்மா ஸ்வராத் தெரிவித்திருக்கிறார். இதனால் இவர் உடல் நலம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த முடிவுக்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடுத்த முடிவை கட்சி மேலிடத்திற்கு சுஷ்மா தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை