ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் பதுங்கியிருந்ததைத் தெரிவிக்காத பாகிஸ்தானியர்கள் முட்டாள்கள்: அதிபர் டொனால்டு டிரம்ப்

தினகரன்  தினகரன்
ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் பதுங்கியிருந்ததைத் தெரிவிக்காத பாகிஸ்தானியர்கள் முட்டாள்கள்: அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்கா: ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் பதுங்கியிருந்ததைத் தெரிவிக்காத பாகிஸ்தானியர்கள் முட்டாள்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடன் 2011-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அதற்கு வெகு காலத்திற்கு முன்பே பின்லேடன் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.உலக வர்த்தக மையக் கட்டிடத் தாககுதலுக்கு முன்பே தான் ஒசாமாவைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டதாகவும், அப்போதையை அதிபர் கிளிண்டன் ஒசாமா பின்லேடனைத் தறவிட்டுவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவுக்கு எந்த உதவியும் செய்யாமல் கோடிக்கணக்கான டாலர்களை பெற்றுக்கொண்டிருக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்று கூறினார். ஆனால் பின்லேடன் தங்கள் நாட்டில் பதுங்கியிருந்ததை அந்த முட்டாள்கள் வெளியிடவிலை என்று கூறியுள்ளார். மேலும் அவா் நேற்று கூறுகையில் அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்றும், “கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா முட்டாள்தனமாக பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டொலர்களுக்கு அதிக தொகையை கொடுத்த போதும் எமது தலைவர்கள் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் எமக்கு பொய்யையும், ஏமாற்றத்தையும் தவிர வேறு ஒன்றையும் தரவில்லை” என்று டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மூலக்கதை