மகளிர் உலகக்கோப்பை டி-20 போட்டி அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டி அரையிறுதியில் இந்தியாஇங்கிலாந்து மோதல்

கயானா: மகளிர் உலகக்கோப்பை டி-20 போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசின் கயானா நகரில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.   நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.

சரியாக விளையாடாத தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் வெளியேறின.

மகளிர் டி-20 உலக்கோப்பை போட்டிகளில் ஹர்மன்பிரித் கவூர் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று பி பிரிவில் முதலிடம் பிடித்தது.   அரை இறுதியில் இங்கிலாந்துடன் வருகிற 23ம் தேதி மோதுகிறது.

மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 22ம் தேதி பலப்பரிட்சை நடத்துகின்றன.

.

மூலக்கதை