பண்டிகை சீசன் இருந்தபோதும் 2 மாத உயர்வுக்கு பிறகு தங்கம் விலை தொடர் சரிவு: இந்த மாதம் சவரனுக்கு 568 குறைந்தது

தினகரன்  தினகரன்
பண்டிகை சீசன் இருந்தபோதும் 2 மாத உயர்வுக்கு பிறகு தங்கம் விலை தொடர் சரிவு: இந்த மாதம் சவரனுக்கு 568 குறைந்தது

சென்னை: தங்கம் கடந்த வார இறுதியில் சவரனுக்கு 144 உயர்ந்தது. நேற்று இதே அளவு சரிந்தது. இந்த மாதம் இதுவரை 568 குறைந்துள்ளது.  சென்னையில் ஆபரண தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. முன்பு சில நாட்கள் தொடர்ந்து உயர்வும், சில நாட்கள் தொடர்ந்து சரிவும் காணப்படும். ஆனால் இந்த மாதம் ஒரு நாள் குறைவதும், மறு நாள் அதே அளவு கூடுவதும் என இருந்து வருகிறது. இந்த மாத துவக்கத்தில் சென்னையில் ஆபரண தங்கம் கிராம் 3,020க்கும், சவரன் 24,160க்கம் விற்கப்பட்டது. 1ம் தேதிக்கு பிறகு 2 நாள் விலை உயர்ந்தது. பின்னர் ஒரு நாள் உயர்ந்து மீண்டும் சரிய தொடங்கியது. கடந்த 10 நாட்களில் பெரும்பாலான நாட்கள் சரிவையே சந்தித்தது. இதன் பலனாக தங்கம் சவரன் 568 குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தங்கம் சவரனுக்கு 272 அதிகரித்தது. அக்டோபரில் சவரனுக்கு 800 அதிகரித்து காணப்பட்டது. பண்டிகை சீசன் இருந்தபோதும், தொடர்ந்து 2 மாத உயர்வுக்கு பிறகு இந்த மாதம் சரிந்து வருகிறது.

மூலக்கதை