வரியை மிச்சப்படுத்த உதவும் முதலீடுகள்

தினகரன்  தினகரன்
வரியை மிச்சப்படுத்த உதவும் முதலீடுகள்

ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வரி செலுத்த வேண்டும். வருவாய் வரம்பை ஒட்டி சற்று கூடுதலாக வாங்குவோருக்கு பெரும்பாலும் பிஎப், வீட்டு வாடகை போன்றவற்றிலேயே வரி மிச்சப்பட்டு விடும். ஆனால் அதை விட அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு வரியில் இருந்து தப்பிக்கவே முதலீடுகளை அதிகமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு உதவும் சில முதலீடுகள்: தேசிய பென்ஷன் திட்டம்: இந்த திட்டத்தில் மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் முதலீடு செய்யலாம். 80 சிசிடி பிரிவில் வரி விலக்கு உண்டு. ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை மேற்கொள்ளப்படும் முதலீடுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். இதில் முதலீடு செய்தவர்கள் 25 சதவீதம் வரை மருத்துவம், சிகிச்சை, உயர் படிப்பு, திருமண செலவுகளுக்கு பணம் எடுத்துக்கொள்ளலாம்.இஎல்எஸ்எஸ்: பங்குச்சந்தையுடன் தொடர்புடைய வரி சேமிப்பு மற்றும் மியூச்சுவல் பண்ட் திட்டமான இஎல்எஸ்எஸ்-ல் முதலீடுக்கு வரிச்சலுகை உண்டு. டிவிடென்ட், லாபத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. இதில் செய்த முதலீட்டை மூன்று ஆண்டு கழித்தே எடுக்க முடியும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ஏற்ற இறக்கம் இருக்கும். நீண்டகாலம் வைத்திருந்தால் லாபம் கிடைக்கும் ஆனால், இதற்கு 10% வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரிச்சலுகை பெறலாம்.பிபிஎப்: பொது சேமநல நிதி எனப்படும் பிபிஎப் திட்டத்தில் 80 சி பிரிவில் வரிச்சலுகை பெறலாம். தற்போது இதற்கு 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறும். குறைந்த பட்சம் 500 முதல் முதலீடு செய்யலாம். தேசிய சேமிப்பு பத்திரம்: என்எஸ்சி எனப்படும் தேசிய சேமிப்பு பத்திரத்தில் தற்போது 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒரு நிதியாண்டில் 100 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 80சி பிரிவில் வரி விலக்கு உண்டு. செல்வமகள் சேமிப்பு திட்டம்: இதில் குறைந்த பட்சம் 250 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். 21 ஆண்டில் முதிர்வு தொகை கிடைக்கும். மகளுக்கு 18 வயது ஆகும்ேபாது முதலீட்டின் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. 80சி பிரிவின்படி 1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். யுலிப்: இந்த திட்டம் ஆயுள் காப்பீடு மற்றும் முதலீட்டு தேவையை ஒரே நேரத்தில் பூர்த்தி செய்கிறது. ஏறக்குறைய மியூச்சுவல் பண்ட் போன்றது. இதில் முதலீட்டை 5 ஆண்டுக்கு எடுக்க முடியாது. 80 சி பிரிவில் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.

மூலக்கதை