ஒன்றேகால் நூற்றாண்டை கடந்தும் ‘மாதிரியாக’ இருந்த துல்லிய எடைக்கல்லை தூக்கிப்போட போறாங்க: புதுதொழில் நுட்பத்துக்கு மாற திட்டம்

தினகரன்  தினகரன்
ஒன்றேகால் நூற்றாண்டை கடந்தும் ‘மாதிரியாக’ இருந்த துல்லிய எடைக்கல்லை தூக்கிப்போட போறாங்க: புதுதொழில் நுட்பத்துக்கு மாற திட்டம்

புதுடெல்லி: எடையை பார்த்து போடுங்க சார்... ஏதோ தங்கம் மாதிரி நிறுக்கறீங்களே. கொஞ்சம் கூடத்தான் போட்டா என்ன என்று காய்கறி, மளிகை வியாபாரிகளிடம் கேட்காதவர்கள் இருக்க முடியாது. என்னதான் நிறுத்தாலும் எடை சரியாக இருக்குமா என்ற குழப்பத்துடன்தான் பலர் பொருட்களை வாங்கி வருவார்கள்.பல கடைக்காரர்கள் மின்னணு தராசுக்கு மாறி விட்டார்கள். ஆனால், இன்னமும் நாட்டின் பல பகுதிகளில், கிராமங்களில் எடைக்கல் பயன்படுத்தி எடை போடப்படுகிறது. இதை உள்ளூர் அதிகாரிகளிடம் சோதித்து சீல் வைக்க வேண்டும். தேய்ந்து அல்லது தேய்த்து கிலோவுக்கு 100 கிராமாவது குறைத்து வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். சரியான எடையை எதை வைத்து முடிவு செய்வது? இதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் மாதிரி எடைக்கல். கிராண்ட் கே எனப்படும் இந்த மாதிரி எடைக்கல் (மூல எடைக்கல்) லண்டனில் பாரீசில் உள்ளது. இது 90 சதவீதம் பிளாட்டினமும் 10 சதவீதம் இரிடியமும் கலந்து செய்யப்பட்டது. பாரீசில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளின் சர்வதேச துறையால் அடிப்படை அளவுக்கல்லாக இது உறுதி செய்யப்பட்டு 1889ம் ஆண்டு முதல் உள்ளது.  உலக அளவில் உள்ள மிக துல்லியமான எடை மாதிரி இதுதானாம். கால மாற்றத்துக்கு ஏற்ப இதை ஓரங்கட்டி விட்டு, புதிதாக கொண்டுவர இருக்கிறார்கள். அதாவது, இயந்திர மற்றும் மின்காந்த ஆற்றலை பயன்படுத்தி கிப்பிள் அல்லது வாட் சமநிலையை செய்து கிலோ கிராம் அளவிடப்பட இருக்கிறது. எடைக்கல் தேய்ந்தாலோ, தூசி படிந்தாலோ எடை அளவு மாறலாம். மின்காந்த அலை மூலம் புதிதாக உருவாக்கப்படும் எடை ‘எலக்ட்ரிக் கிலோ’ ஆக இருக்கும். அளவில் மாற்றமே ஏற்படாது.   அறிவியல் முறைப்படி மிக துல்லியமாக இருக்குமாம். அடுத்த ஆண்டு மே மாதத்தில் புதிய கிலோ கிராம் எடை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, இனிமே ரேஷன் கடையில அளவு சரியா இருக்குமா. பல இடங்களில் மின்னணு தராசு இருக்கே அதுவும் சரியாகத்தான் இருக்குமான்னு கேக்கறீங்களா?... யோசிக்க வேண்டிய விஷயம்தான். மூல எடையை வைத்தால் தெரிஞ்சுடப்போகுது.

மூலக்கதை