14,000 கோடி திரட்ட திட்டம்: பொதுத்துறை இடிஎப் பங்கு: அடுத்த வாரம் விற்பனை

தினகரன்  தினகரன்
14,000 கோடி திரட்ட திட்டம்: பொதுத்துறை இடிஎப் பங்கு: அடுத்த வாரம் விற்பனை

புதுடெல்லி: பொதுத்துறை இடிஎப் பங்குகளை அடுத்த வாரம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 14,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.சிறிய முதலீட்டாளர்கள் பொதுத்துறை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஏற்ப, பொதுத்துறை இடிஎப் (சிபிஎஸ் இடிஎப்) திட்டத்தை 2014ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில் வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட 22 நிறுவன பங்குகள் உள்ளன. முதன் முதலாக 2014 மார்ச்சில் வெளியிடப்பட்ட பங்குகள் மூலம் 3,000 கோடி திரட்டப்பட்டது. பின்னர் 2017 ஜனவரியில் 6,000 கோடி, 2017 மார்ச் மாதம் 2,500 கோடி என மொத்தம் 11,500 கோடியை மத்திய அரசு திரட்டியுள்ளது. இதுபோல் கடந்த ஜூன் மாதம் 8,400 கோடி திரட்டப்பட்டது. நடப்பு ஆண்டில் மட்டும் பொதுத்துறை வங்கி பங்குகள் மூலம் மொத்தம் 15,000 கோடி மத்திய அரசுக்கு கடைத்துள்ளது. இதில் கோல் இந்தியா நிறுவனத்தின் 5,300 கோடி மதிப்பிலான பங்குகள் மற்றும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் 1,700 கோடி பங்குகளும் அடங்கும். நான்காவது முறையாக சிபிஎஸ்இ இடிஎப் பங்குகளை மத்திய அரசு அடுத்த வாரம் வெளியிட இருக்கிறது. இதன்மூலம் 14,000 கோடி நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.  இந்த பொதுத்துறை இடிஎப் திட்டத்தில் என்டிபிசி, என்எல்சி, என்பிசிசி உள்ளிட்ட நிறுவனங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த திட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசின் பங்குகள் 55 சதவீதத்துக்கு கீழ் குறைந்ததால் கெயில், இன்ஜினியரிங் இந்தியா லிமிடெட், கன்டெய்னர் கார்ப்பொரேஷன் ஆகியவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 5,000 முதலீடு செய்யலாம்.

மூலக்கதை