அமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர்

வாஷிங்டன்: அமெரிக்க பல்கலையில் பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், மாணவர்களை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் மிசோரி - கன்சாஸ் பல்கலையில் பார்மசி பேராசிரியராக இருப்பவர் அஷிம் மித்ரா. இவர், தனது மனைவியுடன் வெளியூர் சென்ற நேரங்களில், தன்னிடம் மாணவர்களை வீட்டிற்கு வரவழைத்து, தோட்ட வேலை, நாய் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தியதாகவும், சில மாணவர்கள் புகார் கூறியுள்ளதாக அந்நாட்டு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் பேராசிரியர் பங்கேற்கும் சில நிகழ்ச்சிகளில், பொருட்களை எடுத்து வர வைத்ததாகவும், மேஜைகளை சுத்தப்படுத்த வைத்ததாகவும் புகார் கூறியுள்ளனர்.

மிரட்டல்

இது குறித்து அந்த பல்கலையில், படித்த முன்னாள் மாணவர் காமேஷ் குசிமன்ஷி கூறுகையில், எனது பல்கலை வாழ்க்கை , நவீன அடிமைத்தனம் போல இருந்தது. இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களை பேராசிரியர் மித்ரா தவறாக பயன்படுத்தி வருகிறார். வேலைக்காரனாக இருக்க முடியாது எனக்கூறியதற்கு, பல்கலையிலிருந்து வெளியேற்றி விடுவேன். விசா உள்ளிட்ட அனைத்தையும் இழக்க வேண்டியிருக்கும் என என்னை மிரட்டினார் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக அமித் மித்ராவுடன்பணியாற்றும் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

மறுப்பு:

தன்மீதான புகார்களை மறுததுள்ள அமித் மித்ரா கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக என்னிடம் படிக்கும் மாணவர்களை, அவர்களின் கல்வி தொடர்பாக எனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை வழங்கினேன். அப்போது அவர்களுக்கு, எனது மனைவியே உணவு சமைத்து வழங்கினார். கல்வி தவிர வேறு எந்த பணிகளையும் நான் அவர்களை செய்ய சொன்னதுஇல்லை. விசாவை முடக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டு புரியவில்லை. என்னிடம் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ளனர். அவர்களில் ஒருவர் கூட இதுமாதிரி புகார் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை