இலங்கை பார்லி., அலுவலை நடத்த தேர்வு : குழு அமைக்க முடிவு

தினமலர்  தினமலர்

கொழும்பு: இலங்கையில், ராஜபக்சே மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, குழப்பமான சூழல் காணப்படும் நிலையில், பார்லிமென்ட் அலுவல்களை நடத்த, தேர்வு கமிட்டியை அமைக்க, அந்நாட்டு அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.அண்டை நாடான இலங்கையில், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை, பிரதமர் பதவியில் இருந்து, சமீபத்தில் நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, புதிய பிரதமராக, ராஜபக்சேவை நியமித்தார்.ஆனால், ராஜபக்சே பலத்தை நிரூபிக்க முடியாததை அடுத்து, பார்லிமென்டை, சிறிசேன கலைத்தார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, பார்லிமென்ட் கூடியது. அப்போது, ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.இதையடுத்து, இலங்கை அரசியலில் குழப்பமான சூழ்நிலை காணப்படுகிறது.இந்நிலையில், பார்லிமென்ட் அலுவல்களை கவனிக்க, தேர்வு கமிட்டியை அமைக்க, அந்நாட்டு அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.தற்போதுள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், அதிபர் சிறிசேன விடுத்த அழைப்பின்படி, நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.இதற்கிடையே, இலங்கை பார்லிமென்ட், 23ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் எச்சரிக்கைஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கத்தில், சமீபத்தில், பார்லிமென்ட் கூட்டம் கூட்டப்பட்டது. அதில், வரலாறு காணாத வன்முறை வெடித்தது. எம்.பி.,க்கள், ஒருவரை ஒருவர் தாக்கினர்; தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து வீசினர்; நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன.இது குறித்து, சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூறியதாவது:பார்லிமென்ட் கூட்டத்தில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, உத்தரவிட்டுள்ளேன். அன்று, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்கள் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை