சுலப தொழில் நாடுகளில் 'டாப் - 50' இந்தியா: மோடி

தினமலர்  தினமலர்
சுலப தொழில் நாடுகளில் டாப்  50 இந்தியா: மோடி

புதுடில்லி : ''உலகளவில், சுலபமாக தொழில் புரியும் 'டாப் - 50' நாடுகளில் ஒன்றாக, இந்தியாவை உயர்த்துவதே லட்சியம்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர், டில்லியில், தொழிலதிபர்கள் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:இந்தியாவில், சிவப்பு நாடா முறையால், தொழில் துவங்குவது கடினமாக இருந்தது. அரசின் கொள்கைகள் முடங்கிக் கிடந்தன. கடந்த, 2014ல் நான் பிரதமராக பதவியேற்ற போது, உலக வங்கியின் அறிக்கைப்படி, சுலபமாக தொழில் புரியும் வசதி உள்ள, 190 நாடுகளில், இந்தியா, 142வது இடத்தில் இருந்தது.

என் தலைமையிலான மத்திய அரசு, கொள்கை முடக்கத்திற்கு முடிவு கட்டியது. கொள்கை சார்ந்த நிர்வாக நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. இதனால், தொழில் புரிவது சுலபமானது.கடந்த நான்கு ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட தீவிர கொள்கை திட்டங்களால், இந்தியா, சுலபமாக தொழில் புரியும் நாடுகளில், 65 இடங்கள் முன்னேறி, 77வது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்து, இந்தியாவை, 'டாப் - 50' நாடுகளில் ஒன்றாக முன்னேறச் செய்ய வேண்டும்; நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்பதே என் இலட்சியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை