ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; தமிழக அரசு பதில்மனு

தினகரன்  தினகரன்
ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; தமிழக அரசு பதில்மனு

சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனை செய்வதை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசின் கையில் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மருந்து விற்பைனைக்கு தடை கோரிய வழக்கில், ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், மருந்து கட்டுப்பாடு சட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசு முடிவெடுக்க எடுக்க வேண்டும் என  தமிழக அரசு கூறியுள்ளது.

மூலக்கதை