அமிர்தசரஸில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம்: ராஜ்நாத் சிங் தலைமையில் உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்த உயர்நிலைக் குழுக் கூட்டம்

தினகரன்  தினகரன்
அமிர்தசரஸில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம்: ராஜ்நாத் சிங் தலைமையில் உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்த உயர்நிலைக் குழுக் கூட்டம்

டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்த உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள அதிவால் என்ற கிராமத்தில் நிரன்கரி  பவனில் மத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக 200க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு இருந்தனர். அப்போது, பைக்கில் முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென கூட்டத்தின் மீது கையெறி குண்டை வீசி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். மர்ம நபர்கள் வீசிய கையெறி  குண்டு வெடித்ததில் அங்கிருந்த பலர் காயமடைந்தனர். அலறி கூச்சலிட்டவாறு சிதறி ஓடினார்கள். குண்டு வெடித்ததில் காயமடைந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் டெல்லியில் இன்று உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்த கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உளவுத் துறை, புலனாய்வுப் பிரிவு, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மூலக்கதை