டெல்லிக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள 135 கி.மீ வெளிவட்டச் சாலை மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை மோடி தொடங்கி வைத்தார்

தினகரன்  தினகரன்
டெல்லிக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள 135 கி.மீ வெளிவட்டச் சாலை மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை மோடி தொடங்கி வைத்தார்

டெல்லி: டெல்லிக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள 135 கிலோமீட்டர் தொலைவு மேற்கு வெளிவட்டச் சாலை, மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆகியவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அரியானா மாநிலம் குர்கானில் நடைபெற்ற விழாவில் குந்த்லி - மானேசர் - பால்வால் இடையில் 135 கிலோமீட்டர் தொலைவுக்கான மேற்கு வெளிவட்ட விரைவுச் சாலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். எஸ்கார்ட்ஸ் முஜேசார் முதல் பல்லப்கர் வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், வெளிவட்டச் சாலை திறந்துள்ளதன்மூலம் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலும் காற்று மாசுபாடும் பெருமளவு குறையும் என்றும் மக்களின் வாழ்க்கை எளிதாகி பொருளாதாரம் மேம்படும் என்றும் தெரிவித்தார்.இந்தச் சாலைப் பணிகள் 2010காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்றபோதே முடிந்திருக்க வேண்டும் என்றும், அப்போதைய காங்கிரஸ் ஆட்சி இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மூலக்கதை